மிகவும் பிரபலபான சர்வதேச தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பு தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் (23.02.2023) வழங்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கான அழைப்பை கிளிநொச்சி, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விடுத்துள்ளனர்.
வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அழைப்புச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி அவரை நாளைய தினம் (24.02.2023) காலை ஒன்பது மணிக்கு பூநகரி வீதி, குமரபுரம் – பரந்தனில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.