பிரான்சிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்குள் வரும் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த வருடத்தில் பிரான்ஸின் நிர்வாக பகுதிக்குட்பட்ட ரியூனியன் தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளனர். இவர்கள் அதிகளவானோர் மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ரியூனியன் தீவினை வந்தடைந்துள்ளதாக, பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளர். இவர்களில் சிறுவர்கள் பெண்களும் அடங்குவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக பிரான்ஸிற்குள் இலங்கையர்கள் வருவதை தடுக்க நடவடிக்யை எடுக்க அராங்கம் தீர்மானித்துள்ளது.