கொழும்பு – பிலியந்தல, தெல்தர பகுதியில் சொகுசு வீடொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சூதாட்டம் நடத்திய இடத்திலிருந்து 73940 ரூபா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களில் வீட்டு உரிமையாளரான பெண்ணும், அவரது உறவு முறை மகள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் கைது
சந்தேகநபர்களைக் கெஸ்பாவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.