கரகாட்டக்காரன்
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து 1989ல் வெளிவந்த படம் தான் கரகாட்டக்காரன். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகி வருடக்கணக்கில் தியேட்டரில் ஓடியது.
கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் மற்றும் காமெடி மிக பிரபலம். குறிப்பாக கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி தற்போதும் பிரபலமான ஒன்று.
இரண்டாம் பாகம்
தற்போது கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் வெங்கட் பிரபு என தகவல் வெளியாகி இருக்கிறது. மிர்ச்சி சிவா தான் இதில் ஹீரோவாக நடிக்க போகிறாராம்.
படம் பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் கரகாட்டக்காரன் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கெஸ்ட் ரோலில் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.