சட்டத்தரணி ஒருவர் , ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரியவை சூனியம் செய்து கொலை செய்ய சூனியக்காரர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறை நண்பர்
நிதி மோசடி தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில் இருந்த போது அவருடன் பழகிய சூனியக்காரருக்கு , குறித்த சட்டத்தரணி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சூனியக்காரர் ஹொரண பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.