சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, மிருனாள் தாகூர் நடித்து வருகிறார்கள்.
வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இப்படத்தின் தலைப்பு வெளியாகும் என்றும் மே மாதம் டீசர் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வாங்கிய சம்பளம்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான திரைப்படங்களில் ஒன்று பிதாமகன். இப்படத்தில் நடிக்க நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 5 லட்சம் மட்டுமே தான் சூர்யா சம்பளமாக வாங்கினாராம். அதுவும் தயாரிப்பாளரின் நிலையை அறிந்த குறைவான சம்பளத்தை பெற்றுக்கொண்டார் சூர்யா என கூறப்படுகிறது.