வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் பதில் கூறவேண்டும் என சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே வேலன் சுவாமிகள் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது வேலன் சுவாமிகள் மேலும் தெரிவிக்கையில்,
வேலன் சுவாமிகள் கண்டனம்
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையினால் அந்த திணைக்களமும், பொலிஸாரும் பொறுப்புக்கூற வேண்டும்.
அத்துடன், இந்த செயலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழிச்சி இயக்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிப்பு என்பது அனைவரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.
இந்த ஆலயம் பல்லாண்டு காலமாக தமிழர்களால் வழிபடப்பட்டு வந்த ஆலயம். ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு இந்த ஆலயம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், ஆலயத்தின் பாதுகாப்புக்கு பொலிஸாரே பொறுப்பு கூறவேண்டும் என்று தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.