ஐபிஎல் 16-வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் குஜராத் அணி பீல்டிங் செய்த போது வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது. ருதுராஜ் அடித்த பந்தை எல்லை கோட்டில் நின்ற தடுக்க முற்பட்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வில்லியம்சன் ஐபிஎல் முழு சீசனில் இருந்தும் விலகியுள்ளார்.