பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள இறங்கு துறையில் இருந்து நீரில் விழுந்த சிறுமியை மீன்பிடி கப்பலில் பயணித்த நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
புத்தாண்டு காலத்துக்காக மீன் வாங்குவதற்காக குறித்த சிறுமி தனது தந்தையுடன் இன்று (11) துறைமுகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது மீன்களை கொள்வனவு செய்ய பெருமளவான மக்கள் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு ஏற்பட்ட அழுத்தத்தால், மற்றொருவரின் உடலில் அடிபட்டு, சிறுமி சமநிலை இழந்து தண்ணீரில் விழுந்தார்.
அந்நிலையில் படகில் இருந்த மீனவர் ஒருவர் சிறுமி விழுந்ததைக் கண்டு உடனடியாக தண்ணீரில் குதித்து சிறுமியை மீட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.