ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. அதன்படி, முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், வரும் நாட்களில் நல்ல வசூலை பெறும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ருத்ரன் திரைப்படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் ‘ருத்ரன் திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களை கேட்டு வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
All the best @offl_Lawrence Master @kathiresan_offl sir and the entire team #Rudhran
Hearing lot of good reviews congrats 🙂— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 16, 2023




















