மறைந்த நடிகா் திலகம் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் கணேசன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்”எனும் நூலின் அறிமுக விழா யாழில் இடம்பெறவிவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில்நடிகா் திலகத்தின் மகன் ராம்குமார் கணேசன் கலந்துகொள்ளவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.




















