குருநாகல் – நிக்கவரெட்டிய பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் ஏழு பெண்களினால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 22 வயதான பௌத்த பிக்குவை குறித்த பெண்கள் பிக்கு தங்கியிருந்த விகாரைக்குள் புகுந்து, பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபர்களான குறித்த பெண்கள் பிக்குவை விகாரையில் இருந்து விலகுமாறும், பிக்கு அணிந்திருந்த காவி உடையை கழற்றுமாறும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பிக்கு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உடல் மற்றும் மன ரீதியான பாதிக்கப்பட்ட பிக்கு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பெண்களையும் பொலிஸார் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.