லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (3) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 3638 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1462 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயுவின் புதிய விலை 681 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.