கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆயுர்வேத சேவை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் விடுதியின் முகாமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத சேவை நிலையம்
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்ஸ, விஜேசிறிவர்தன மாவத்தை பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் நிலையத்தின் முகாமையாளர் உட்பட 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 43 வயதுகளுடைய மித்தெனிய, கஹடகஸ்தென்ன, தன்கந்த, மதவச்சி, புத்தள,மொரட்டுவ, பொத்துவில் ரக்வான, இரத்மலானை மற்றும் வாதுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான பெண்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதுடன் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.