தந்தை ஒருவர் தனது 20 வயது மகளுக்கு நஞ்சை பருக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் நேற்று முன்தினம் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி நேற்று முன்தினம் இரவு மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் வேளையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது தந்தை தனக்கு நஞ்சு பருக்கியதாக கூறியுள்ளார்.
யுவதி பாலியல் வல்லுறவு
அதேசமயம் பாதிக்கப்பட்ட இளம் யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.இதனையடுத்து உறவினர் வீட்டில் தங்கி இருந்த தந்தையை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில்,
சம்பந்தப்பட்ட யுவதியின் தாய் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளார் எனவும் அத் தாய்க்கு மூன்று குழந்தைகள் உள்ளதோடு மூன்று பேரும் பெண்கள் எனவும் 9 வயது 11வயது 20 வயது உடையவர்கள் என கூறினார்.
இவ்வாறு பெண் பிள்ளைகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டு செல்வதால் பல குற்ற செயல்கள் இடம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டிய அவர், மலையக பகுதிகளில் இருந்து பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு போவதை பிள்ளைகள் நலன் கருதி நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.