நடிகர் மனோபாலா
இவரது பெயரை சொன்னதுமே மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது இவரது உடலமைப்பு தான். அவரது லுக்கை கிண்டல் செய்தபடி நிறைய படங்களில் காட்சிகள் வந்துள்ளது, அவரும் ரசித்து அந்த காட்சியில் நடிப்பார்.
தொடர்ந்து படங்கள் நடித்து பிஸியாக இருந்த வந்த இவர் கடந்த மே 3ம் தேதி காலை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
மனோபாலாவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தார்கள்.
நடிகரின் மனைவி செயல்
மனோபாலாவின் மனைவி உஷா அவர்கள் தனது கணவர் இறப்பிற்கு பிறகு அவர் பயன்படுத்திய வாட்சை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லா துணி மற்றும் பொருள்களை அனாதை இல்லத்திற்கு கொடுத்துள்ளார்.
பொதுவாக ஓருவர் இறந்தபின் அவர் பயன்படுத்திய துணிகளை எரித்து விடுவார்களாம், ஆனால் இவர் உதவியுள்ளார்.
உஷா அவர்களின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது, மனோபாலாவும் தான் உயிரோடு இருந்தவரை மற்றவர்களுக்கு உதவியுள்ளார்.