கனடாவில் பாடசாலைகளில் அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிரபல மனநல ஆய்வாளர் துலானி பியரேஸ் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அநேகமாக அலைபேசி பயன்படுத்தும் மாணவ மாணவியர் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வகுப்பறைகளில் அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதனை தொடர்ந்து மாணவர்கள் கல்வியிலும் ஏனைய சமூக செயற்பாடுகளிலும் திறம்பட செயற்படுவதனை அவதானிக்க முடிந்தது என மாணவர்கள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .
கண்டாவின் பாடசாலை ஒன்றில் அலைபேசிகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதனை தொடர்ந்து அங்கு மாணவர்களின் செயல்திறன் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் அலைபேசிகளை தொலைவில் வைத்துவிட்டு மேற்கொண்ட கற்றல் செயல்பாடுகளின் போது சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.