யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் நேற்றையதினம்(08.05.2023) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறித்த வளாகம் புலிகளின் தேவைக்கான பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் அதை அவர்கள் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர்.
புதிதாக சேர்க்கப்பட்ட துறைகள்
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்திருந்தோம்.
தற்போது இவ்வளாகத்தில் நான்கிற்கும் மேற்பட்ட துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.