யாழ் போதனா (Teaching ) வைத்தியசாலையில் சிக்கலான காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர் Dr. சிவகுமாரன் காலமாகியுள்ளார்.
Dr. சிவகுமாரன் அவர்கள் பல தலைசிறந்த வைத்தியர்களை உருவாக்கியவர் ஆவார். அத்துடன் மருத்துவபீட மாணவர்களால் “கடவுள்” என செல்லமாக அழைக்கப்பட்டவர்.
அதுமட்டுமல்லாது கடமை, ஒழுக்கம், நோயாளி முதன்மையானவர் என பல சீரிய பண்புகளை மாணவர்களுக்கு கற்பித்தவர் என யாழ். போதனா வைத்தியசாலை பணிபாளர் சத்திய மூர்த்தி பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மறைந்த Dr. சிவகுமாரன் அவர்களுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.