முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14வருட நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு எங்கும் அனுஸ்டிக்கபப்ட்டுவரும் நிலையில், நாளை கொழும்பிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாளை காலை 10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள்
வடக்குகிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாளைய தினம் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெள்ளை மலர்களை கொண்டுவரவும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேவேளை கடந்தவருடம் மஹிந்த குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பபோராட்டத்தில் குதித்த மக்களால் காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு கூரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.