யாழில், தனது கணவன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாக குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மற்றும் காதில் தோடு அணிந்த மேலும் 3 பேரை தனித்தனியே அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்து கணவர் இவ்வாறு நடந்துகொண்வதாக மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
எச்சரித்தும் கேட்காத கணவர்
யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வி வலையம் ஒன்றின் அதிகாரியான ஒருவர் மீதே மனைவி இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதேசமயம் அதிகாரியின் மனைவியும் அரச அலுவலர் என கூறப்படுகின்றது.
பிள்ளைகள் பாடசாலை சென்ற பின் தானும் அலுவலகம் சென்று விடுவதாகவும் இதன் பின்னர் தனது கணவர் இளைஞர்களை வீட்டுக்கு கொண்டு வந்து இவ்வாறு துஸ்பிரயோகம் செய்வதாகவும் மனை கூறியுள்ளார்.
தனது கணவரின் கைத் தொலைபேசியை பரிசோதித்த போதே தனக்கு கணவரது இவ்வாறான செயற்பாடு தெரியவந்ததாக கூறிய பெண், இது தொடர்பாக எச்சரித்த பின்னரும் கணவர் ஓரினச் சேர்க்கையை கைவிடவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்ற சிசிரிவி காட்சிகளையும் பொலிசாருக்கு கொடுத்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.