உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத் துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விலை அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
மேலும் கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து ஒரு மாதத்தில் கூடி உரிய விலை குறைப்பு சதவீதத்தை சரியாக அறிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.