தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய சம்பவம் ஒன்று பதியவாகி உள்ளது.
இது தொடர்பில் அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் பெற்றோர், நன்னடத்தை அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர்.
தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான குறித்த ஆசிரியர் இன்று (31) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.