பட்டதாரி ஆசிரியர்களாக மேலும் 5,500 பேர் விரைவில் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இத்தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பௌதீக வளங்களுடன் மனித வளத்தையும் பூர்த்தி செய்து பாடசாலை முறைமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல், வர்த்தகம் ஆகிய பாடங்களுக்கு மூன்று மொழிகளிலும் 5,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.




















