எதிர்காலத்தில் விஞ்ஞான பீட கற்பித்தல் டிப்ளோமாவை நான்கு வருடங்களாக நீடித்து பட்டப் படிப்பாக அபிவிருத்தி செய்து டிப்ளோமா முடித்த ஆசிரியர்களுக்கு பட்டதாரியாக அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் அங்கு மேல் மாகாணங்கள் மற்றும் தேசிய பாடசாலைகள் தொடர்பான 2355 ஆசிரியர் நியமனங்கள் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டதுடன், எஞ்சிய ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டன.
அரசு மற்றும் பிற சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பாக கல்வித்துறைக்கு சொந்தமான பகுதியை நடைமுறைப்படுத்த தேவையான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.