சூரியவெவவில் இளைஞரொருவரை பிரதேச மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரியவெவ, வெவேகம பகுதியில் திருடச் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் 2ஆம் திகதி அதிகாலை இருவருடன் காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நீர்ப் பம்பியை திருடிச் செல்ல முற்பட்ட நிலையில் பிரதேச மக்களால் குறித்த இளைஞர் தாக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவ இடத்திற்கு சூரியவெவ பொலிஸ் அதிகாரிகள் வந்த போது சந்தேகநபரின் உடல்நிலை மோசமடைந்திருந்ததை அடுத்து அவர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.