விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு மூன்று ‘Double Wattled Cassowaries’ என்ற பறக்க முடியாத பறவை இனங்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு இப் பறவை இனம் தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்காக இந்தப் பறவைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையுமே இவ்வாறு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




















