பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
ஏ9 வீதியில் பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ் நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் ஒன்று மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பளை முல்லையடியைச் சேர்ந்த ராஐபாஸ்கரன் ஐதுர்சிகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பி சென்றுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சமபவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















