களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்கு முறைப்பாடு இல்லை
அதேவேளை குழந்தை காணாமல் போனமை தொடர்பில், இதுவரை பொலிஸாருக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் சடலம், கடற்கரையில் இருப்பதால், அந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.



















