பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரு வீட்டில் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பது தான் விதிமுறை.
அத்துடன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 7க்கான இது குறித்த கூடுதல் விபரங்கள் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளர்
இந்த நிலையில் போட்டியாளர் விபரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 ன் முதல் போட்டியாளராக 90ஸ்களில் நம்முடைய நெஞ்சங்களை வென்ற நடிகர் அப்பாஸ் கலந்து கொள்ள போகிறாராம்.
தற்போது நடிகர் அப்பாஸ் இந்தியாவில் தான் இருந்து வருகிறார்.
அத்துடன் சூப்பர் சிங்கர் ஜீனியர்ஸ் 9 ன் விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார்.
மற்றைய சீசன்களை விட இந்த சீசன் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.