பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்
தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் மூலதன சந்தைக் கழகங்களை நிறுவும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.
கண்டி நுகவெல மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW