சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளையில் அதில் ஏற்பட்ட குளறுபடிகளால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
சென்னையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கன மழை காரணமாக அந்த நிகழ்ச்சி தடைப்பட்டிருந்தது. இதனால் அந்த நிகழ்ச்சியை நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நடைபெற்றது.
ஆனால் அந்த நிகழ்ச்சி மக்களை பரவசப்படுத்தாமல் மாறாக நிறைய குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பிரச்சினை, பற்றுச்சீட்டுக்கள் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்ட மக்கள் என கடும் இன்னல்களை சந்தித்திருந்தனர்.
மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
இசை நிகழ்ச்சியால் மக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மீது அதிக வெறுப்புக் கொண்டார். அதனால் தன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருக்கிறார்.
அந்த பதிவில், “என்னை சிலர் GOAT என்று அழைப்பார்கள். நாம் அனைவரும் விழித்துக் கொள்வதற்கு இப்போது நானே பலி ஆடாக மாறுகிறேன்.
உலகம் தரம் வாய்ந்த கட்டமைப்பு, சுற்றுலாத்துறையில முன்னேற்றம் திறன் வாய்ந்த வகையில் கூட்டம் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தல், விதிமுறைகளை பார்வையாளர்கள் ஒழுங்காக பின்பற்றுதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச திறமைகளை ஊக்குவித்து, கலாசார வேட்கையை தூண்டுதல் உள்ளிட்ட விஷயங்களை சென்னையில் நடத்திட வேண்டுகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023
மேலும், மற்றொரு பதிவில், நடந்த குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் பதிவிட்டிருக்கிறார் அந்த பதிவில், அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். எங்கள் குழு விரைவில் பதிலளிப்பார்கள் @BToSproductions என பதிவிட்டிருக்கிறார்.