கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் எரிவாயு விற்பனையாளர்கள் தமக்கு நிறுவனத்திடமிருந்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் சில தினங்களாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.