கல்முனையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்முனை- நற்பிட்டிமுனை பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு பிரதான வீதி மற்றும் கல்முனை -சாய்ந்தமருது செல்லும் முக்கிய பிரதான வீதிகளிலேயே கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் நடமாட முடியாத நிலை
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவு நிலமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீதியில் பயணம் செய்வோர் நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதுட்ச்ன், தொடர்ச்சியாக அப்பகுதிகளில் விபத்துக்கள் சம்பவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, கட்டாக்காலி நாய்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.