பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (24) மாலை ஊடக சந்திப்பொன்றை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பாகவும் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள தனது செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
” இலங்கையில் நான் செய்ய விருக்கும் முதல் இசை நிகழ்ச்சி இதை சரியாக செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் இலவசம் அனைவரும் கண்டிப்பாக பங்கு பற்றுங்கள்.
அத்தோடு இந்த நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்தால் உங்களின் முழு ஒத்துழைப்பையும் தாருங்கள், நிகழ்ச்சி பிடிக்காவிட்டால் திட்டுங்கள் ” எனவும் இதன் போது தெரிவித்துள்ளார்.