புதிய இணைப்பு
காசாவில் 120இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிபடுத்தி உள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்த காரணத்தினால், காசாவில் இருந்து 4 இலட்சம் பலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுத்து வருகிறது என இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
முதலாம் இணைப்பு
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மூண்டுள்ள போர் 8ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
இந்தநிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் இதுவரை 447 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் கொடூரமாக கொல்லப்பட்ட மக்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்களிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த தாக்குதலில் உயிரிழந்த 1,417 பேரில் 447 குழந்தைகள் மற்றும் 248 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சபை கண்டனம்
இதேவேளை, காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
சுமார் 11 லட்சம் பேர் வாழும் வடக்கு காசா பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அனைவரும் வெளியேறுவது சாத்தியமில்லாதது எனவும், இதனால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்தனர்.