போலி ஆவணங்கள் தயாரித்த குற்றத்திற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு ஒன்றில் சந்தேகநபர் ஒருவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகள்
எனினும் குறித்த சந்தேக நபர் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே, ஆவணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தின் பதிவாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.