பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சட்ட மூலம் ஒக்டோபர் மூன்றாம் திகதி ஒழுங்குபத்திரத்தி;ல் சேர்க்கப்பட்டது என தெரிவித்துள்ள சபாநாயகர் எனினும் பின்னர் அவைதலைவரின் செயலாளர் அந்த சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது என கடிதம் அனுப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அந்த சட்டமூலம் ஒழுங்குபத்திரத்தில் இல்லை மேலும் இன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதேவேளை இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் உட்பட பல தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.