தெஹிவளை, அத்திடிய பகுதியில் 16 வயதான யுவதி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில் குறித்த சிறுமி குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
அத்திடிய இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுமார் 6 மணித்தியாலங்கள் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவரது சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
காதல் விவகாரம்
உயிரிழந்த சிறுமி ஹட்டன், டிக்ஓயா பகுதியைச் சேர்ந்த பிரசனவதனி என தெரியவந்துள்ளது.
அவரது தாயார் வெளிநாட்டில் தொழில் புரிவதால், பெல்லன்வில பகுதியில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கி பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.
காதல் தகராறு காரணமாக குறித்த யுவதி உயிரை மாய்த்துள்ளதாக. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத அறை
தெஹிவளையில் கடை ஒன்றில் பணிபுரியும் போது 29 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.