விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று காலை 11.30 மணிகு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
மேலும் அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் சீயான் 62 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
விக்ரம் சம்பளம் உயர்வு
இந்நிலையில், தற்போது விக்ரம் ரூ. 23 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் திடீரென தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.
தங்கலான் படத்தின் மூலம் விக்ரமிற்கு நல்ல வரவேற்பு திரையுலகினர் மத்தியில் கிடைத்துள்ளது. கண்டிப்பாக இப்படம் விக்ரமின் கெரியரில் மாபெரும் வெற்றியை தேடி தரும் என்கின்றனர்.
இதனால் அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ள சீயான் 62 படத்திற்காக ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் விக்ரம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.