இந்த முறை பெரும் போகத்திற்காக பண்டி உரம் எனப்படும் MOP உரத்தை 9,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று (26.11.2023) காலை நடைபெற்ற பயிர் சேத நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பண்டி உர மூட்டை ஒன்றின் விலை 9,000 ரூபாவாக குறைக்கப்படும் எனவும், அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் அந்த விலையில் பண்டி உரத்தை விற்பனை செய்யும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.