பல் வலியை போக்க வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே வலியை குறைக்கலாம். பல்வலிக்கு சிகிச்சையளிக்க, சமையலறையில் வைத்திருக்கும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம். சில இயற்கை பொருட்கள் பல்வலியை குறைக்க உதவுகிறது.
உப்பு நீரைக் கொண்டு கழுவலாம்
உப்பு நீர் தான் பல் வலிக்கான சிறந்த சிகிச்சையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உப்புநீர் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்.
எனவே உப்பு நீரைக் கொண்டு எழுவது வீக்கத்தை குறைக்கவும், வாய்வழி காயங்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
1/2 டீ ஸ்பூன் உப்பை எடுத்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து பற்களில் படும்படி கொப்பளியுங்கள்.
பூண்டு
பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளன. இது பக்டீரியாக்களை கொல்லும். அதே நேரத்தில் வலி நிவாரணியாக செயல்படவும் உதவுகிறது.
ஒரு பூண்டை நசுக்கி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த பூண்டை பயன்படுத்துங்கள்.பூண்டு விழுதுக்கு சிறிது உப்பு கூட நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.
சில பூண்டுகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இது உங்க பல்வலியை குறைக்கும்.
கிராம்பு
பற்களுக்கு சிகிச்சை அளிக்க கிராம்பு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பு எண்ணெய் வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும். கிராம்பு எண்ணெய்யில் யூஜெனோல் உள்ளது.
கிராம்பு ஒரு பருத்தி பஞ்சில் ஒரு சில துளிகள் கிராம்பு எண்ணெய்யை போட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்.
கிராம்பு எண்ணெய்யை தனியாக பயன்படுத்தக் கூடாது. ஆலிவ் எண்ணெய்யுடன் நீர்த்துப் போகச் செய்து பயன்படுத்துங்கள்.
ஒரு துளி அல்லது இரண்டு துளி கிராம்பு எண்ணெய்யை நீரில் விட்டு மவுத்வாஷாக கூட நீங்கள் பயன்படுத்தி வரலாம்.