சில வர்த்தகர்கள் வெள்ளைச் சீனியுடன் சாயத்தை கலந்து சிவப்புச் சீனியாக மாற்றி அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
சமகாலத்தில் சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டை பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
217 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் வெள்ளை சீனிக்கு சாயம் பூசி 350 முதல் 370 ரூபாய் வரையான விலை விற்பனை செய்யப்படுகிறது.
சீனியின் விலை
இதன்மூலம் இந்த வியாபாரிகள் ஒரு கிலோ சீனிக்கு சுமார் 150 ரூபா இலாபம் ஈட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
வெளிச்சந்தையில் 260 ரூபாயில் இருந்த வெள்ளை சீனியின் விலை 310 ரூபாயாகவும், பொதி செய்யப்படாத 290 ரூபாயில் இருந்த சிவப்பு சீனி 350 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
சிவப்பு சீனி
தற்போது வெள்ளை சீனிக்கு 275 ரூபாவும் சிவப்பு சீனிக்கு 330 ரூபாவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் கட்டுப்பாட்டு விலை 295 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் ஒரு கிலோவின் விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.