அம்பலாங்கொடை பிரதேசத்தில் மனைவியை கொலை முயற்சி செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியை அறையில் அடைத்து நாற்காலியில் கட்டி, போர்வைகள், தலையணைகள், மெத்தைகளை உடலில் போட்டு தீ வைக்க முயற்சித்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட நபர்
குறித்த நபர் தனது மனைவியின் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கொலை தொடர்பில் சாட்சியமளிக்க கூடாது என தனது மனைவியின் தாயை அச்சுறுத்தி 29 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[
எவ்வாறாயினும், குறித்த சந்தேக நபர் தனது மனைவி மீது தீ வைப்பதற்கு முன்னர் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.