கொழும்பு – சீதுவை, கொட்டுகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் இன்று ( 26.11.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தொடர்ந்து சந்தேக நபர்களை கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.