தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை மாவீரர் தினமான இன்றைய நினைவுகூர்வதற்குத் தாயகத்தில் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றார்கள்.
மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவீர்களுக்கு அஞ்சலி
மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இன்றையதினம் மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரச புலனாய்வாளர்களின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினநிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் இன்றையதினம் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளன.
மேலும் மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த ஒரு வாரமாக மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.