மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நிரந்தர ஊழியர்களை மட்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சார சபை மற்றும் இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு அடுத்த வருடம் வழங்கப்படவிருந்த 25% சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.