தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னை இராமாபுரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பில் , தனியார் வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்படுகின்றது.