நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டிற்கான , க.பொ.த சா.தர (O/L )பரீட்சையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதிய சேர்ந்த மாணவர்கள் பலர் சித்திபெற்று தாம் கற்ற பாடசாலைக்கும், தமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அந்தவகையில் யாழ்/குடத்தனை கரையூர் அ.மி.த.க பாடசாலை மற்றும் அயல் பாடசாலையில் கல்விகற்று சித்தியடைந்த குடத்தனை வடக்கு மாணவர்களான,
அன்ரன்ஜெயக்குமார் லிதியா 5A B 2C S,
சதீஸ்தரன் றதீஸ் 3A 3B C 2S,
சுதாகரன் நவநீதன் 2A B 4C 2S,
அரசகுலசிங்கம் கவிஷா 3B 3C S,
சற்குணராச யதுசா 6A 2B C,
ஜெகதீபன் சதுசன் 4A 3B 2 C,
ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைபெற்று பரீட்சையில் சித்தியெத்தியுள்ளனர். இந்நிலையில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.