யாழ் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பியோடிய கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த சிசிரிவி காணொளிகளை கொண்டு வன்முறைக் கும்பலை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் இரவு வேளையிலும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த வன்முறைச் சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பில்லை என தெரிவித்து ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் தனது காருக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.